ADDED : பிப் 15, 2024 12:33 AM

சென்னை:''அ.தி.மு.க.,வில் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது,'' என, நடிகை கவுதமி தெரிவித்தார்.
பா.ஜ.,விலிருந்து கடந்த ஆண்டு விலகிய, நடிகை கவுதமி நேற்று, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, அவரது வீட்டில் சந்தித்து, அக்கட்சியில் இணைந்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
கட்சியை பழனிசாமி வழிநடத்தி செல்லும் முறை; அனைவரும் இணைந்து ஒன்றாக வேலை செய்ய வேண்டும் என்ற, அவரது எண்ணம் ஆகியவற்றை பார்க்கிறேன். இவை என்னை கவர்ந்தன.
மக்கள் சேவையை நல்லபடியாக செய்ய, மக்கள் உரிமையை மக்களிடம் சேர்க்க, அ.தி.மு.க., சரியான கட்சி; சரியான இடம் என்ற முழு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நான் 25 ஆண்டுகளாக பா.ஜ.,வில் இருந்துள்ளேன். சில நாட்களுக்கு முன்பு, சில காரணங்களுக்காக அக்கட்சியிலிருந்து விலகி வந்தேன்.
தற்போது, சரியான நேரத்தில் அ.தி.மு.க.,வில் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது. பொறுப்பு அளித்தால், களம் இறங்கி வேலை செய்வேன். ஜெயலலிதா என் மனதில் என்றும் உள்ளார். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட விஷயம். அவர் மக்களுக்காக வாழ்ந்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.

