ADDED : ஜன 20, 2024 12:25 AM

சென்னை:பா.ஜ.,விலிருந்து நீக்கப்பட்ட, நடிகை காயத்ரி ரகுராம், அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
நடிகை காயத்ரி ரகுராம், தமிழக பா.ஜ., வெளிநாடு மற்றும் பிற மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு தலைவராக இருந்தார். அப்போது தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவரை கடுமையாக விமர்சித்தார்.
இதன் காரணமாக, கடந்த 2022 நவம்பரில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜனவரி மாதம், பா.ஜ.,வில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்தார்.
அதன்பின், சமூக வலைதளங்களில், அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து, கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.
தி.மு.க.வில் இணையவிருப்பதாக செய்திகள் பரவிய நிலையில், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியை, சென்னையில் உள்ள அவருடைய வீட்டில் சந்தித்து, அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, சென்னை வந்த நிலையில், பா.ஜ.,விலிருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராமை, கட்சியில் சேர்த்து, பா.ஜ.,வுடன், அ.தி.மு.க.,வுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை, பழனிசாமி மீண்டும் உணர்த்தி உள்ளாத அ.தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர்.