sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தெலுங்கு மக்களை தவறாக பேசியதாக தி.மு.க., பொய் பிரசாரம்; சரமாரியாக விளாசிய கஸ்தூரி

/

தெலுங்கு மக்களை தவறாக பேசியதாக தி.மு.க., பொய் பிரசாரம்; சரமாரியாக விளாசிய கஸ்தூரி

தெலுங்கு மக்களை தவறாக பேசியதாக தி.மு.க., பொய் பிரசாரம்; சரமாரியாக விளாசிய கஸ்தூரி

தெலுங்கு மக்களை தவறாக பேசியதாக தி.மு.க., பொய் பிரசாரம்; சரமாரியாக விளாசிய கஸ்தூரி

132


UPDATED : நவ 05, 2024 06:41 PM

ADDED : நவ 04, 2024 05:38 PM

Google News

UPDATED : நவ 05, 2024 06:41 PM ADDED : நவ 04, 2024 05:38 PM

132


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தெலுங்கு மக்களை தவறாக பேசவில்லை. ஆனால் அப்படி பேசியதாக தி.மு.க., ஐ.டி., விங் பொய் பிரசாரம் செய்கிறது என நடிகை கஸ்தூரி குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்களை பற்றி தவறாக சித்தரித்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சமூக ஊடகங்களில் இதை பற்றி பெரும் விவாதமே நடைபெற்றது. இந்நிலையில் சென்னையில் நடிகை கஸ்தூரி நிருபர்களிடம் தாம் பேசியது என்ன என்பது பற்றி நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது: பொய்யை ஆயிரம் தடவை சொல்லியே எல்லாரையும் காலி செய்வது தி.க., நீதிக்கட்சி, தி.மு.க.,வின் திராவிட மாடல் நிலைப்பாடு. பல பொய்களை அவர்கள் பேசியும் நான் அசரவில்லை. நான் தமிழச்சியாக இருந்தாலும் இன்றைக்கு எனது பிழைப்பும், வரவேற்பும், வெற்றியும் தெலுங்கு மக்கள் தான் கொடுத்துள்ளனர். நான் ஒரு தெலுங்கு வீட்டு மருமகள் என்று ஏற்றுக் கொண்டுள்ளனர்.

நான் கூறியதில் தெலுங்கு இன மக்களுக்கு விரோதமான எந்த கூற்று இருக்கிறது? தெலுங்கு மக்களை பற்றி நான் எதுவும் கூறவில்லை. திராவிடம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும், தீயசக்திகளை சொன்னால், அதை தெலுங்கு மக்களை நோக்கி சொன்னேன் என்று திசை திருப்பியவர்களை வன்மையாக கண்டிக்கிறேன். தெலுங்கு இனத்தையோ, தெலுங்கு மக்களையோ நான் தவறாக கூறவில்லை.

பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று யார் குறிப்பிட்டார்களோ வீட்டில் தெலுங்கு பேசிவிட்டு வெளியில் தமிழில் பேசுகிறார்களோ, அவர்களை தான் அப்படி குறிப்பிட்டேன். ஈ.வே.ரா.வில் இருந்து ஆரம்பித்து வீட்டில் தெலுங்கு பேசிக் கொண்டு, வெளியில் வந்து நான் தான் தமிழர் என்று சொல்கிறார்களே அவர்களைத் தான் கூறினேன்.

தெலுங்கு பேசும் மக்களில் இருவகை உண்டு. ஒன்று என்னுடைய குடும்பத்தை போல. இன்னொன்று, தெலுங்கை வீட்டில் பேசி விட்டு, வெளியில் வந்து தமிழினம் என்று முழக்கத்தை வைத்துவிட்டு தமிழர்கள் ஓட்டுகளை வாங்கி, ஏமாற்றி பின்னர் ஓட்டு போட்டவர்களை தமிழர்களே இல்லை என்று ஒதுக்கி வைக்கும் அந்த இனத்தை தான் நான் சொன்னேன். நான் தெலுங்கு மக்களை பற்றி தவறாக பேசவில்லை.

தெலுங்கு மக்கள், அவர்களுக்கு எதிராக நான் பேசியதாக அப்பட்டமாக 100 சதவீத திராவிடிய பொய்யை யாரும் நம்ப வேண்டாம். எத்தனையோ திராவிடிய பொய்களில் இதுவும் ஒன்று. எப்பவும் உண்மை காலால் நடந்து போவதற்குள் பொய், இறக்கை கட்டி மூன்று முறை உலகத்தை சுற்றி வந்துவிடும். நான் ஒரு பிராமண பெண் என்பதால் இப்படிப்பட்ட வித, விதமான பொய்களை கூறி வந்தனர். தி.மு.க., ஐ.டி., விங் பொய் பிரசாரம் செய்கின்றனர். என்னை பற்றி அவதூறாக பேசி வந்தனர். எனக்கு யாரிடமும் இருந்து சர்டிபிகேட் தேவையில்லை.

எந்த மொழி பேசினாலும் தமிழர்கள் நலனுக்காக உழைப்பவர்களை என் தமிழர்கள் என்று நான் ஒத்துக் கொள்ள தயாராக இருக்கிறேன். ஆனால் இங்கு ஆட்சி செய்யும் தி.மு.க.,வும், அவர்களுக்கு பின்புலமாக இருக்கும் தி.க., நாத்திக இயக்கங்களும் தயாராக இல்லை. வீட்டில் சாமி கும்பிட்டு, யாகம் வளர்த்துவிட்டு வெளியில் வந்து நாத்திகம் பேசுகின்றனர் தி.மு.க., தி.க.,காரர்கள்.

கடைசியில் தெலுங்கு மக்களுக்கு நான் அவர்களின் அன்புக்கு பாத்திரமாகி விட்டேன். அங்கு எனது கொடி நன்றாக பறக்கிறது என்று தெரிந்து, சனாதன எதிர்ப்பை கடைபிடிக்கும் இவர்கள், லட்டு, வெங்கடேஸ்வர சுவாமியை கிண்டல் செய்தவர்கள், நேற்று வரை எங்களை அசிங்கப்படுத்தியவர்கள், இன்று திடீரென தெலுங்கு மக்கள் மீது என்ன அக்கறை வந்துவிட்டது.

தமிழக அரசியலுடன் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தை ஏன் தெலுங்கானா, ஆந்திராவில் விளம்பரப்படுத்த வேண்டும். எனது குடும்பம் ஹைதராபாதில் இருக்கிறது, அடிக்கடி நான் அங்கு சென்று வருவதால் தான் இப்படி செய்கின்றனர். எனக்கு தெரிந்து பல பிராமணர்கள் கடும் கஷ்டத்தில் இருக்கின்றனர். இங்கு சம்பளம் வாங்கும் ஒவ்வொருவரின் சம்பளத்தை சேர்த்தாலும் முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்புக்கு ஈடாகுமா? உதயநிதி நடத்திய கார் ரேஸ் பட்ஜெட்டுக்கு ஆகுமா இங்கு உள்ளவர்களின் சம்பளம்.

பிராமணர்கள் மற்றவர்களை ஒடுக்கினார்கள் என்று கூறுவது முற்றிலும் பொய். நான் பேசியதற்கு கோர்ட்டில் வழக்கு தொடரவே முடியாது. நான் தெலுங்கு மக்களையோ, எந்த ஒரு தனிப்பட்ட நபரை பற்றியோ குறிப்பிட்டு சொல்லவில்லை. தி.மு.க., என்ற வார்த்தைக்கு என்மீது கேஸ் போடமுடியாது. ஏன் என்றால் அது சாதி கிடையாது. அது ஒரு சித்தாந்தம். நான் சொன்னது அனைத்தும் உண்மை. உண்மையில் இருந்து பின்வாங்க போவது இல்லை. ஆனால் நான் சொல்லாததை வெளியில் சொல்லி உள்ளனர்.

ஆந்திரா, தெலுங்கானா மக்களையோ நான் கூறவில்லை. தெலுங்கு மக்களை எப்படி மதிக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். தெலுங்கு மக்கள் எந்தளவுக்கு என் மீது அன்பு செலுத்துகின்றனர் என்பதும் எனக்கு தெரியும்.

நான் யாரை பற்றி சொன்னேன் என்று உலகத்துக்கே தெரியும். அதனால் தான் இந்தளவுக்கு பிரசாரம் செய்கின்றனர். மேடையிலும் நான் யார் பேரையும் சொல்லவில்லை. பிராமணர்கள் தமிழர்கள் இல்லை என்று சித்தாந்தம் கூறும் யாராக இருந்தாலும் அவர்களை என் உயிர்மூச்சு உள்ளவரை எதிர்ப்பேன். பிராமண வெறுப்பு, கடவுள் மறுப்பு, சனாதன ஒழிப்பு இது எல்லாம் தான் திராவிடியம். இந்த வார்த்தை எப்படி ஆபாசமாகும்.

திராவிடியம் என்பது கொச்சையான, பொய்யை மூலதனமாக வைத்த, சனாதன எதிர்ப்பை காட்டி, ஊராரை ஏமாற்றி பிழைக்கிற கொச்சையான சித்தாந்தம். அந்த சித்தாந்தமே ஆபாசம்.

இவ்வாறு நடிகை கஸ்தூரி கூறினார்.

மன்னிப்பு கோரினார் கஸ்தூரி

இதனிடையே, கஸ்தூரி இன்று( நவ.,05) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த இரண்டு நாட்களாக எனக்கு மிரட்டல் மற்றும் விமர்சனங்கள் வருகின்றன. அவை எனது உறுதியை இன்னும் வலிமையாக்குகின்றன. இருப்பினும், எனது மரியாதைக்குரிய தெலுங்கு சகோதரர் ஒருவர், தமிழகம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள ஒட்டுமொத்த தெலுங்கு மக்கள் மீதும் நான் தேர்வு செய்த வார்த்தைகளின் தாக்கங்களை பொறுமையாக என்னிடம் விளக்கினார். எனது கருத்துகள் குறிப்பிட்ட சிலரை சார்ந்தது மட்டுமே. ஒட்டு மொத்த தெலுங்கு மக்களை சார்ந்தது அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். எனது தெலுங்கு குடும்பத்தை புண்படுத்துவதோ அல்லது காயப்படுத்துவதோ எனது நோக்கம் இல்லை. கவனக்குறைவுக்கு மன்னிக்கவும். அனைவரின் நலன் கருதி, 3 ம்தேதி ஆற்றிய உரையில் தெலுங்கு குறித்த எனது கருத்துகளை திரும்ப பெறுகிறேன். இந்த சர்ச்சையானது, அன்றைய தினம் நான் எழுப்பிய முக்கியமான விஷயங்களில் இருந்து திசைதிருப்பி விட்டது. தமிழகத்தில் வசிக்கும் பிராமணர்களின் கண்ணியம் மற்றும் பெருமையை காக்க, தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு சகோதரர்கள் ஒன்று திரள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கஸ்தூரி கூறியுள்ளார்.



கஸ்தூரி மீது வழக்கு!


தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பேசியதாக அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் அளித்த புகாரின் பேரில் நடிகை கஸ்தூரி மீது, மதம், இனம் குறித்து இருவேறு மக்களிடையே பிரச்னை ஏற்படுத்தும் விதமாகப் பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us