தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/போதை மாத்திரை பறிமுதல் 234.25 சதவீதம் அதிகரிப்பு

போதை மாத்திரை பறிமுதல் 234.25 சதவீதம் அதிகரிப்பு

போதை மாத்திரை பறிமுதல் 234.25 சதவீதம் அதிகரிப்பு


UPDATED : நவ 19, 2026 05:52 PM

ADDED : நவ 19, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 05:52 PM ADDED : நவ 19, 2026 05:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், ஏழு மாதங்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகளின் எண்ணிக்கை, 234 சதவீதம் அதிகம்’ என, போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் நடப்பு ஆண்டில், மே – நவ., 15 வரை, ஏழு மாதங்களில் போதைப் பொருள் தொடர்பாக, 10,559 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவற்றில், 15,478 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில், போதைப் பொருள் கடத்தல் மற்றும் பதுக்கல், விற்பனை என, தொடர் குற்றங்களில் ஈடுபட்ட, 1,177 பேர் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், போதை மாத்திரைகள் பறிமுதல் 234.25 சதவீதம் அதிகமாகி உள்ளது.

கடந்த, 2025ல் மே – நவ., 15 வரை, மாநிலம் முழுதும், 1 லட்சத்து, 45,315 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதுவே நடப்பு ஆண்டில், அதே கால கட்டத்தில், 4 லட்சத்து, 85,725 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இதன் வாயிலாக, 234 சதவீதம் அளவுக்கு போதை மாத்திரை பறிமுதல் அதிகமாகி இருப்பது தெரியவந்துள்ளது.

அதேபோல, போதைப் பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோரின் நிதி ஆதாரங்களை முடக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில், மே – நவ., 15 வரை, 1,560 வங்கி கணக்குகளும், இவற்றில் இருந்த, 2.13 கோடி ரூபாயையும் முடக்கி உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us