தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பொறியியல் படித்த போலீசாரை தேடும் கூடுதல் டி.ஜி.பி.,

பொறியியல் படித்த போலீசாரை தேடும் கூடுதல் டி.ஜி.பி.,

பொறியியல் படித்த போலீசாரை தேடும் கூடுதல் டி.ஜி.பி.,


ADDED : பிப் 18, 2024 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2024 05:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை : அதிநவீன தொழில்நுட்ப ரீதியான தடயவியல் பகுப்பாய்வு கருவிகளை கையாள, பொறியியல் படித்த போலீசாரை அனுப்புமாறு, மாநில சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சஞ்சய்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போலீஸ் கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி.,க்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

சென்னை, அசோக் நகரில், போலீஸ் பயிற்சி கல்லுாரியில், மாநில சைபர் கிரைம் குற்றப்பிரிவு செயல்படுகிறது. அங்குள்ள ஆய்வகத்திற்கு, 'ஆன்லைன்' வாயிலாக செய்யப்படும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பகுப்பாய்வு செய்ய, அதிநவீன தொழில்நுட்ப தடயவியல் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன.

இவற்றை கையாள, பி.இ., - பி.டெக்., - எம்சிஏ., - எம்.எஸ்சி., - ஐ.டி., மற்றும் கணினி அறிவியல் படித்துள்ள போலீசாரை, அயல் பணி என்ற அடிப்படையில் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து, வரும் 20ம் தேதிக்குள், மாநில சைபர் கிரைம் பிரிவுக்கு தகவல் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us