ADDED : ஜன 25, 2025 12:54 AM
சென்னை:தமிழகத்தில் ரேஷன் கடைகள் வாயிலாக, கார்டுதாரர்களுக்கு அத்தியாவசியஉணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இதனால் பொங்கல், தீபாவளி உள்ளிட்ட முக்கிய அரசு விடுமுறை நாட்களில் மட்டும், ரேஷன் கடைக்கு விடுமுறை விடப்படுகிறது. மற்ற விடுமுறை நாட்களில், கடைகள் திறந்திருக்கும்.
அதன்படி, இந்த ஆண்டில் ரேஷன் கடைகளுக்கு, 11 நாட்கள் மட்டும் விடுமுறை அறிவித்து, 2024 டிச., 11ல் உணவுத் துறை உத்தரவிட்டது.
அரசு பொது விடுமுறை நாட்கள் அனைத்திலும், ரேஷன் கடைகளுக்கு விடுமுறை விட வேண்டும் என, ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, இந்த ஆண்டில் அனைத்து அரசு பொது விடுமுறை நாட்களும், ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாட்களாக அறிவித்து, உணவு வழங்கல் துறை நேற்று உத்தரவிட்டது.
இதற்காக, ரேஷன் கடைபணியாளர்கள் சங்கத்தினர், அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.