ADDED : ஜன 18, 2024 12:08 AM
சென்னை:அகில இந்திய காங்கிரஸ் செயலரும், கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி.,யுமான செல்லக்குமார் அரசியல் விவகாரக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் காரியக் கமிட்டியின் சிறப்பு உறுப்பினர் பதவியில், தமிழகம் சார்பில் செல்லக்குமார் தொடர்ந்து நீடித்து வருகிறார்.
காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையிலான நிர்வாகத்தில், அகில இந்திய காங்கிரஸ் செயலர் பொறுப்பும் செல்லக்குமார் வகித்து வருகிறார்.
அவருக்கு அருணாசலப்பிரதேசம், மிசோரம், மேகலாய ஆகிய மாநிலங்களுக்கு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில், மீண்டும் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் வகையில், அத்தொகுதியின் தேர்தல் பணிகளை, அவர் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
அரசியல் விவகாரக் குழு உறுப்பினர் பதவிக்கு செல்லக்குமார் தலைமையில் 17 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை, காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.