தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கூடுதல் தொகுதிகள் வேண்டும்; ம.தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம்

கூடுதல் தொகுதிகள் வேண்டும்; ம.தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம்

கூடுதல் தொகுதிகள் வேண்டும்; ம.தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம்


UPDATED : ஜூன் 22, 2025 12:07 PM

ADDED : ஜூன் 22, 2025 11:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 22, 2025 12:07 PM ADDED : ஜூன் 22, 2025 11:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு: தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறுவதற்கு ஏற்ற வகையில், வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை பெற்று போட்டியிட வேண்டும் என்று ஈரோட்டில் நடந்த ம.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ம.தி.மு.க.,வின் 31வது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் இன்று(ஜூன் 22) நடைபெற்றது. கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளார் துரை வைகோ, ம.தி.மு.க., அவைத் தலைவர் அர்ஜூன் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

* தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறுவதற்கு ஏற்ற வகையில், வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை பெற்று போட்டியிட வேண்டும்.

* 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று, முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சி தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற வேண்டும் உள்ளிட்ட மொத்தம் 28 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ம.தி.மு.க., முன்னாள் எம்.பி., கணேசமூர்த்திக்கு பெருமை சேர்க்கும் வகையில், ஈரோட்டில் அவர் வசித்த வீதிக்கு, அவரது பெயரை சூட்ட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.பாண்டியாறு மோயாறு இணைப்புத்திட்டம் செயல்படுத்த வேண்டும், காளிங்காராயன் வாய்க்கால் மாசுபாட்டுக்கு தீர்வு காண வேண்டும் என்பது உட்பட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us