இரு நாட்களுக்கு கூடுதல் டோக்கன் பத்திர பதிவுத்துறை அறிவிப்பு
இரு நாட்களுக்கு கூடுதல் டோக்கன் பத்திர பதிவுத்துறை அறிவிப்பு
ADDED : ஜூன் 04, 2025 10:42 PM
சென்னை:'வைகாசி மாத முகூர்த்த நாட்களை முன்னிட்டு, இன்றும், நாளையும் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்கப்படும்' என பதிவுத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர், அதற்கான பத்திரங்களை முகூர்த்த நாட்களில் பதிவு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இதற்காக முகூர்த்த நாட்களில் கூடுதல் டோக்கன் வழங்க, பதிவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன்படி, வைகாசி மாதத்தின் முகூர்த்த நாட்களான இன்றும், நாளையும் அதிக அளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் வைத்து, இந்த இரண்டு நாட்களிலும், சார் -- பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்கப்படும்.
வழக்கமாக 100 டோக்கன் வழங்கப்படும் இடங்களில் 150 டோக்கன்கள்; வழக்கமாக 200 டோக்கன் வழங்கப்படும் அலுவலகங்களில் 300 டோக்கன்கள் வழங்கப்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது.