ஆடிப்பெருக்கில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் 'டோக்கன்'
ஆடிப்பெருக்கில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் 'டோக்கன்'
ADDED : ஜூலை 31, 2026 01:35 AM

சென்னை: 'ஆடிப்பெருக்கை ஒட்டி, வரும் 3ம் தேதி, அனைத்து சார் -- பதிவாளர் அலுவலகங்களில், கூடுதல் 'டோக்கன்'கள் வழங்கப்படும்' என, பதிவுத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து, பதிவுத்துறை அறிக்கை:
ஆடிப்பெருக்கு தினத்தன்று, பத்திரப் பதிவு களுக்கான தேவை அதிகரிக்கும் நிலையில், பொதுமக்களுக்கான, 'டோக்கன் ' எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு சார் -- பதிவாளர் உள்ள அலுவலகங்களில், 100க்கு பதிலாக, 150 பத்திரங்கள் பதிவு செய்யும் வகையில் டோக்கன் களும், இரண்டு சார் - பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில், 200க்கு பதில் 300 டோக்கன்களும் வழங்கப்படும்.
மேலும், அதிகளவில் ஆவண பதிவுகள் நடக்கும் 100 அலுவலகங்களில், 150 டோக்கன்களும், ஏற்கனவே வழங்கப்படும், 12 தத்கால் பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக நான்கு டோக்கன்களும் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
