உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 15, 2026 06:55 AM

அ நிறம் | அளவு
சென்னை: பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்ட அறிவிப்பு:
முகூர்த்த நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில், அதிக பத்திரப்பதிவு நடக்கும் என்பதால், பொது மக்கள் கோரிக்கை அடிப்படையில், கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன்படி, ஆனி மாதத்தின் கடைசி நாளான நாளை, அதிகமானோர் பத்திரப்பதிவு செய்ய, ஆர்வம் காட்டுவர். இதை கருத்தில் வைத்து, சார் - பதிவாளர் அலுவலகங்களில், நாளை கூடுதல் டோக்கன் அனுமதிக்கப்படும்.
வழக்கமாக, 100 டோக்கன்கள் வழங்கப்படும் சார் - பதிவாளர் அலுவலகங்களில், 150 டோக்கன்கள்; தினசரி, 200 டோக்கன்கள் வழங்கப்படும் இடங்களில் நாளை, 300 டோக்கன்கள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
