ADDED : நவ 26, 2025 12:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'கார்த்திகை மாத முகூர்த்த நாள் என்பதால், நாளை பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும்' என, பதிவுத்துறை அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் முகூர்த்த நாட்களில், அதிக எண்ணிக்கையிலான மக்கள் பத்திரப்பதிவுக்கு வருகின்றனர். வழக்கமான எண்ணிக்கையில் அனுமதிக்கப்படும், 'டோக்கன்'கள் இதற்கு போதுமானதாக இருப்பதில்லை.
எனவே, பொதுமக்கள் கோரிக்கை அடிப்படையில், முகூர்த்த நாட்களில் கூடுதல் டோக்கன்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை அதிக பத்திரங்கள் பதிவுக்கு தாக்கலாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, வழக்கமான நாட்களில், 100 டோக்கன்கள் வழங்கப்படும் சார் பதிவாளர் அலுவலகங்களில் நாளை, 150 டோக்கன்கள்; 200 டோக்கன்கள் அனுமதிக்கப்படும் அலுவலகங்களில் நாளை, 300 அனுமதிக்கப்படும் என, பதிவுத்துறை அறிவித்துள்ளது.

