ஆதவ் அர்ஜூனாவுக்கு மறைமுக திட்டம்; சொல்கிறார் திருமாவளவன்
ஆதவ் அர்ஜூனாவுக்கு மறைமுக திட்டம்; சொல்கிறார் திருமாவளவன்
UPDATED : டிச 15, 2024 06:19 PM
ADDED : டிச 15, 2024 02:57 PM

திருச்சி: ஆதவ் அர்ஜூனாவுக்கு மறைமுக திட்டம் இருப்பதாக தெரிகிறது என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அழுத்தம் கொடுத்து என்னை யாரும் இணங்க வைக்க முடியாது. நான் சுதந்திரமாக எடுத்த முடிவு. கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து எதிர்மறையான கருத்துக்களை தெரிவிக்கிறார். அவருக்கு ஏதோ ஒரு மறைமுக செயல் திட்டம் இருப்பதாக தெரிகிறது.ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் வெறும் கண் துடைப்பு கிடையாது. ஆதவ் அர்ஜூனா சர்ச்சைக்குரிய கருத்துகளை சொல்லுவதே தவறு. அப்படி சொல்ல கூடாது.
அவர் மீண்டும் விசிகவில் இயங்க வேண்டுமென நினைத்து இருந்தால் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்திருப்பார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 5,000 நிதியுதவி வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். அந்த வகையில், மழை, வெள்ள நிவாரண நிதியாக குடும்ப அட்டைக்கு தலா ரூ. 5,000 வழங்கிட வேண்டும். கால்நடைகள், பொருள் சேதம் கணக்கீடு நடத்தப்பட்டு அவற்றுக்கேற்ப நிவாரணத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும். மத்திய அரசு 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டத்தை நிறைவேற்ற பார்க்கிறது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.