ADDED : டிச 07, 2024 01:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'யாருங்க பிறப்பால் முதல்வர்? அந்த அறிவு கூட இல்ல அந்த ஆளுக்கு' என ஆதவ் அர்ஜுனா குறித்த நிருபர்கள் கேள்விக்கு உதயநிதி காட்டமாக பதில் அளித்தார்.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'சினிமா செய்தியை பார்ப்பதில்லை' என துணை முதல்வர் உதயநிதி பதில் அளித்தார்.
'பிறப்பால் யாரும் முதல்வராக கூடாது என்று ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளாரே' என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'யாருங்க பிறப்பால் முதல்வர்? மக்கள் தேர்ந்தெடுத்து தான் முதல்வராகியுள்ளார். அந்த அறிவுகூட இல்ல அந்த ஆளுக்கு' என உதயநிதி பதில் அளித்தார்.