ஆதிதிராவிட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற புதிய நடைமுறை அமல்
ஆதிதிராவிட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற புதிய நடைமுறை அமல்
UPDATED : நவ 19, 2026 09:30 PM
ADDED : நவ 19, 2026 09:30 PM
சென்னை: ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான, மத்திய அரசின் கல்வி உதவித்தொகைகள் பெற, புதிய நடைமுறைகளை பின்பற்ற, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் செந்தில்ராஜ் கடிதம் எழுதி உள்ளார்.
ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் செந்தில் ராஜ், பள்ளிக் கல்வி இயக்க இயக்குனர், அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, கடிதம் எழுதி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான, மத்திய அரசின் கல்வி உதவித்தொகைகளைப் பெற, புதிய நடைமுறை அமல்படுத்தபட்டு உள்ளது. மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில், மாணவர்கள் ஒரு முறை தங்கள் விபரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
ஆதார் அடிப்படையிலான அங்கீகாரம் மற்றும் கல்வி நிறுவனங்களின் கே.ஒய்.சி., பதிவேடை பூர்த்தி செய்ய வேண்டும். இவ்விபரத்தை, பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மாணவர்களின் விண்ணப்பங்களை, தாமதமின்றி சரி பார்க்க வேண்டும்.
கல்வித் துறை அலுவலர்கள், மாணவர்களின் பதிவை கண்காணித்து, பூர்த்தி செய்யாமல் நிலுவையில் உள்ளவர்களுக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
