ADDED : மார் 08, 2024 10:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:அரசு நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, வருவாய்த்துறை அலுவலர்களின் காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர், கடந்த மாதம், 27ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன், சங்கத்தின் மாநில தலைவர் முருகையன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் நேற்று சமரச பேச்சு நடத்தினார். அப்போது, 10 அம்ச கோரிக்கைகளில், ஏற்கனவே பதவி இறக்க பணி பாதுகாப்பு அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், மற்ற ஒன்பது கோரிக்கைகளையும் ஏற்று, விரைவில் அரசாணைகள் பிறப்பிப்பதாக, அமைச்சர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.