தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ அரசு பள்ளிகளில் இன்று 'அட்மிஷன்' துவக்கம்

 அரசு பள்ளிகளில் இன்று 'அட்மிஷன்' துவக்கம்

 அரசு பள்ளிகளில் இன்று 'அட்மிஷன்' துவக்கம்


ADDED : மார் 01, 2026 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 06:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: அரசு பள்ளிகளில், இன்று முதல் மாணவர் சேர்க்கை துவங்கப்படுகிறது.

தமிழகம் முழுதும் 37,000 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகளை காட்டிலும், தனியார் பள்ளி களில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வந்தது.

இதற்கு, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்குவதில் ஏற்படும் காலதாமதமே காரணம் என, ஆசிரியர்கள், பெற்றோர் தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2024ம் ஆண்டு முதல், அரசு பள்ளிகளில், அந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, மார்ச் 1ம் தேதி துவங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு கல்வி யாண்டுக்கான சேர்க்கை இன்று துவங்குகிறது.

அங்கன்வாடி மையங் களில், முன்பருவ கல்வியை நிறைவு செய்யும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை, அந்த பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்க்க, பள்ளி தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.

மாணவர் சேர்க்கையை உயர்த்த, அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து, பெற்றோர், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us