UPDATED : ஜன 09, 2024 12:51 PM
ADDED : ஜன 09, 2024 12:14 PM

சென்னை: ‛‛ லோக்சபா தேர்தலில் கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம். அதுகுறித்த முடிவை நான் பார்த்துக் கொள்கிறேன்'' என அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ் கூறியுள்ளார்.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடந்தது. அப்போது அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கட்சி நிர்வாகிகளுடன் லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் இ.பி.எஸ்., கூறியதாவது: நிர்வாகிகளுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை மாவட்ட செயலாளர்கள் களைய வேண்டும். அனைத்து நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து லோக்சபா தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்ட செயலாளர்கள் தங்களுக்குட்பட்ட லோக்சபா தொகுதியில் சிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகள் பெயர் பட்டியலை தயார் செய்ய வேண்டும். மாற்று கட்சியில் உள்ளவர்களை அதிமுகவில் இணைக்க கவனம் செலுத்தி மூத்த நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும். அதிமுக நிர்வாகிகள் கருத்து வேறுபாடு இன்றி செயல்பட வேண்டும். லோக்சபா தேர்தலில் கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம். அதுகுறித்த முடிவை நான் பார்த்துக் கொள்கிறேன். கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சுமூகமாக செயல்பட வேண்டும். இவ்வாறு கட்சி நிர்வாகிகளுக்கு இ.பி.எஸ் அறிவுரை வழங்கி உள்ளார்.