நாங்களும் வந்துட்டோம்ல! மழை களத்தில் மக்களுக்காக அணி அமைத்த அ.தி.மு.க.,!
நாங்களும் வந்துட்டோம்ல! மழை களத்தில் மக்களுக்காக அணி அமைத்த அ.தி.மு.க.,!
ADDED : அக் 16, 2024 08:31 AM

சென்னை: சென்னையில் மழை நிவாரண பணிகளை மேற்கொள்ள அ.தி.மு.க., சார்பில் அணி அமைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது: மழை வெள்ளத்தால் தலைநகர் சென்னை தத்தளித்ததையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த விடியா திமுக அரசு மக்களை கைவிட்ட அவலத்தையும் சென்ற ஆண்டே பார்த்தோம். எனவே தான், உதவ ஐ.டி. விங் சார்பில் RapidReponseTeam அமைத்து பாதிக்கப்பட்ட மக்களுடன் தோளோடு தோள் நின்றது. தற்போது தலைநகர் சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், எனது அறிவுறுத்தலின்படி, மீண்டும் RapidResponseTeam அமைக்கப்பட்டுள்ளது.
சென்னைவாழ் பொதுமக்கள் இந்த கடுமையான தருணத்தில் தங்களுக்கு தேவையான உதவிகளைப் பெற தங்கள் பகுதியில் உள்ள கழகத் தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம். இந்த செயலற்ற தி.மு.க., அரசைப் போல் அன்றி மக்கள் மீது அக்கறையோடு என்றைக்கும் அ.தி.மு.க., உழைக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறி உள்ளார்.