ADDED : ஆக 06, 2011 10:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே பசுபதிபுரத்தில் அமைந்துள்ள வேம்பு மாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் மாரியம்மனுக்கு பணம், சேலைகள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு வந்தது. இன்று, கரூர் பகுதி நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களால் வழங்கப்பட்ட வெள்ளி கொலுசுகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வெள்ளி கொலுசு அலங்காரத்தில் காட்சி அளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர். அலங்காரத்திற்கு பின் வெள்ளி கொலுசுகள் உரியவர்களிடம் வழங்கப்பட்டது. இந்த கொலுசுகளை வீட்டில் வைத்திருந்தால் செல்வம் பெருகும், தீயவை நெருங்காது என்பதால் பலரும் போட்டி போட்டு இந்த கொலுசுகளை வாங்கிச் செல்கின்றனர்.