ADDED : ஜன 11, 2024 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:நாடு முழுவதும் உள்ள 12 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் வழங்கும் பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மூன்று தவணைகளாக இது வழங்கப்படுகிறது. இதுவரை 15 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 20.95 லட்சம் பேருக்கு இது வழங்கப்படுகிறது. இடைக்கால பட்ஜெட் பிப்ரவரியில் தாக்கலாவதால் அடுத்த தவணையை முன்கூட்டியே வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.