உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூன் 20, 2026 04:13 AM
அ நிறம் | அளவு
தமிழக வெற்றிக் கழக தேர்தல் அறிக்கையில், 5 ஏக்கருக்கு உட்பட்ட விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தீர்கள். இப்போது, 75,000 ரூபாய் வரை மட்டுமே கடனை தள்ளுபடி செய்துள்ளீர்கள். குறு விவசாயிகளுக்கு 93,000 ரூபாய், சிறு விவசாயிகளுக்கு 1.60 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. த.வெ.க., அரசு அறிவித்துள்ள 75,000 ரூபாய் வரையிலான கடன் தள்ளுபடியால், குறு விவசாயிகளுக்கு கூட பயனில்லை. கடந்த கால அரசுகள், சிறு விவசாயிகள் வரையிலான கடனை தள்ளுபடி செய்துள்ளன. எனவே, குறு, சிறு விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
-ஓ.எஸ்.மணியன், எம்.எல்.ஏ., - அ.தி.மு.க.,
