sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 ஏ.ஐ., மாநாடு, சி.பி.எஸ்.இ., தேர்வு டில்லியில் போக்குவரத்து மாற்றம்

/

 ஏ.ஐ., மாநாடு, சி.பி.எஸ்.இ., தேர்வு டில்லியில் போக்குவரத்து மாற்றம்

 ஏ.ஐ., மாநாடு, சி.பி.எஸ்.இ., தேர்வு டில்லியில் போக்குவரத்து மாற்றம்

 ஏ.ஐ., மாநாடு, சி.பி.எஸ்.இ., தேர்வு டில்லியில் போக்குவரத்து மாற்றம்


ADDED : பிப் 15, 2026 11:59 PM

Google News

ADDED : பிப் 15, 2026 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு மற்றும் சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய தேர்வுகள் டில்லியில் இன்று துவங்குவதை முன்னிட்டு, மாநகரின் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு இன்று முதல் 20ம் தேதி வரை, பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் நடக்கிறது. ஐந்து நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

அறிவுறுத்தல் அதே நேரத்தில், சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நாளை துவங்குகின்றன. தேர்வு காலை 10:30 மணிக்கு துவங்குவதால், மாணவர்கள் 10:00 மணிக்குள் தேர்வு மையத்தில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எனவே, டில்லி மாநகரின் பல சாலைகளில் போக்குவரத்து சுமுகமாக இருக்க பல்வேறு நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நெரிசலில் சிக்கி அவதிப்படாமல் இருக்க பல சாலைகளில் போக்கு வரத்து மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு உதவ, முக்கியச் சாலைகளில் போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு நடக்கும் பிரகதி மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்து கண்காணிக்கப் படுகிறது.

மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, புதுடில்லி மாவட்டத்தில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. .

மதுரா சாலை, சுப்பிரமணிய பாரதி மார்க், ராஜேஷ் பைலட் மார்க், தீஸ் ஜனவரி மார்க், அக்பர் சாலை, தீன் மூர்த்தி மார்க், மதர் தெரசா கிரசன்ட், சர்தார் படேல் மார்க், ஜன்பத், பிரோஷா சாலை, சாந்தி பாத், சத்யா மார்க், சப்தர்ஜங் சாலை, கர்தவ்ய பாதை மற்றும் அருகிலுள்ள சாலைகளில் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மாற்றுப்பாதை பைரோன் மார்க் மற்றும் மதுரா சாலையில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

புதுடில்லி சர்வதேச விமான நிலையம் செல்ல தேசிய நெடுஞ்சாலை - -48, ராவ் கஜ்ராஜ் சிங் மார்க் மற்றும் துவாரகா 22வது செக்டார் துவாரகா சுரங்கப்பாதை வழியாக செல்லலாம்.

புதுடில்லி, பழைய டில்லி மற்றும் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களுக்கு ரிங் ரோடு, ஆசிரமம் சவுக், ராஜ்காட், காஷ்மீரி கேட் மற்றும் வந்தே மாதரம் மார்க் ஆகிய சாலைகளில் செல்லலாம்.

ஆம்புலன்ஸ் மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயங்கும். அதே நேரத்தில், முக்கியப் பிரமுகர்கள் செல்லும் போது பஸ், டாக்ஸி, ஆட்டோ ஆகியவை மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும்.

ஆனால், ஆம்புலன்ஸ் உட்பட அத்தியாவசிய சேவைகளுக்கான வாகனங்கள் எந்த தடையுமின்றி செல்ல அனுமதிக்கப்படும்.

போக்குவரத்து போலீசாரின் ஆலோசனைகளைப் பின்பற்றி, டில்லி மக்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.

கூடுமானவரை மெட்ரோ ரயில் சேவைய பயன்படுத்த முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us