திமுகவுக்கு கிடைக்கும் ராஜ்யசபா எம்.பி,. பதவி; தடுக்க அதிமுக-பாஜ திட்டம்
திமுகவுக்கு கிடைக்கும் ராஜ்யசபா எம்.பி,. பதவி; தடுக்க அதிமுக-பாஜ திட்டம்
ADDED : டிச 14, 2025 10:18 AM

அடுத்தாண்டு ஏப்ரலில், தமிழகத்தைச் சேர்ந்த ஆறு எம். பி.,க்கள் ராஜ்யசபாவிலிருந்து ஓய்வு பெறுகின்றனர். இதில் கனிமொழி சோமு, என்.ஆர்.இளங்கோ, செல்வராசு மற்றும் திருச்சி சிவா ஆகிய நால்வரும் தி.மு.க.,வினர். மற்றவர்கள் அ.தி.மு.க.,வின் தம்பிதுரை, த.மா.க., தலைவர் ஜி.கே.வாசன். இந்த பதவிகளுக்கு புதியவர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் ஆணையம் மார்ச்சில் தேர்தல் நடத்தும்.
அப்போது, தமிழக சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு பிரசாரம் நடை பெற்றுக் கொண்டிருக்கும். ராஜ்யசபா தேர்தலில் நான்கு எம். பி.,க்கள் பதவி தி.மு.க.,விற்கு கிடைக்கும். ஆனால், 'சட்ட சபை தேர்தல் ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறவுள்ள நிலையில், அந்த தேர்தலுக்கு பின், ராஜ்யசபாவிற்கு தேர்தல் நடத்த வேண்டும்.
சட்டசபை தேர்தலில், தி.மு.க., தோற்கப்போகிறது; அப்படியிருக்க எதற்கு அவர்களுக்கு ராஜ்யசபா எம். பி.,க்கள் கிடைக்க வேண்டும்' என, பா.ஜ., - அ.தி.மு.க.,வில் பேச்சு எழுந்துள்ளதாம். 'சட்டப்படி ராஜ்யசபா எம்.பி., பதவிகாலியாக இருக்கக்கூடாது. எனவே, தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, ராஜ்யசபா தேர்தல் நடைபெற வேண்டும்.
இதைத் தடுக்க வேண்டுமென்றால், புதிய சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும்; ஆனால், அது நடைமுறையில் சாத்தியமா? இது சட்ட சிக்கலை உருவாக்கும். மேலும், இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை செல்ல வாய்ப்புள்ளது. எனவே, இது மிகவும் கஷ்டமான விஷயம் என்றாலும், பா.ஜ., எதையும் செய்யும்' என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

