அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோரிக்கை மீண்டும் பஸ் இயக்க அமைச்சர் உத்தரவு
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோரிக்கை மீண்டும் பஸ் இயக்க அமைச்சர் உத்தரவு
ADDED : ஜூன் 18, 2026 04:24 AM
ஆத்துார்; கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில், கோவையில் இருந்து, சேலம் வழியே ஆத்துாருக்கு இரு பஸ்களை இயக்கப்பட்டன. குறிப்பாக ஆத்துாரில் இருந்து காலை, 6:43 மணி; 11:30; இரவு, 7:05 மணி; கோவையில் இருந்து அதிகாலை, 5:30; மதியம், 12:45; இரவு, 7:45 மணிக்கு, பஸ்கள் இயக்கப்பட்டன.
கோவையில் உள்ள கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர், மின்மோட்டார் உள்ளிட்ட எலக்ட்ரிக்கல் பொருட்கள் வாங்க, ஏராள-மானோர் பயன் படுத்தினர். கடந்த மே, 18 முதல், இரு பஸ்களும், கோவையில் இருந்து, சேலம் வரை மட்டும் இயக்கப்பட்டன. இதனால் ஆத்துார் மக்கள், கடந்த, 13ல், அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரனிடம் மனு அளித்தனர். மறுநாள் அவர், ஆத்துார் வந்த, தமி-ழக போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திப-னிடம், மக்கள் சார்பில் வழங்கிய மனுவை வழங்கினார். இதை ஏற்று அமைச்சர் பார்த்திபன், அதிகாரிக-ளுக்கு
உத்தரவிட்டார். இதனால் நேற்று முதல், இரு பஸ்களும், மீண்டும் ஆத்துார் வரை இயக்கப்
படுகிறது.
