ADDED : ஜன 03, 2026 02:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அ.தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாநகராட்சி, நான்காவது வார்டில், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட, தண்ணீர் தேங்கிய குழியில் விழுந்து, நான்கு வயது சிறுவன் ரோகித், பரிதாபமாக உயிரிழந்தது, அதிர்ச்சி அளிக்கிறது.
சிறுவன் உயிரிழப்புக்கு முழு காரணம், தி.மு.க., அரசின் அலட்சியமே. டெண்டர் கொள்ளை அடிப்பதில் இருக்கும் கவனம், பணிகளை பாதுகாப்பாக செய்வதில், தி.மு.க., அரசுக்கு இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

