அ.தி.மு.க.,வுக்கும் எஸ்.ஐ.ஆர்., மீது அதிருப்தியே
அ.தி.மு.க.,வுக்கும் எஸ்.ஐ.ஆர்., மீது அதிருப்தியே
ADDED : நவ 16, 2025 12:43 AM
தமிழகத்துக்கு எவ்வித அச்சுறுத்தல் வந்தாலும், அதை எதிர்த்து தி.மு.க., தொண்டர்கள் போராடுவர். அதற்கான தகுதி நம் கட்சி தொண்டர்களுக்கு உண்டு.
எஸ்.ஐ.ஆர்., வாயிலாக தவறு நடந்து விடக்கூடாது என்பதற்காக, தி.மு.க., தொண்டர்கள் வீடு வீடாக செல்கின்றனர்.
எஸ்.ஐ.ஆர்., என்னும் வாக்காளர் திருத்தப் பட்டியல் பணி வாயிலாக, தேர்தல் கமிஷனை வைத்துக் கொண்டு, பா.ஜ., நியாயமான ஓட்டுகளை அழிக்கப் பார்க்கிறது.
பீஹார் போல, தமிழகத்திலும் ஓட்டுரிமை பலருக்கும் பறி போய்விடக் கூடாது என்பதற்காகவே, தமிழக முதல்வரும் துணை முதல்வரும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
எஸ்.ஐ.ஆர்., அணுகுமுறை அ.தி.மு.க.,வுக்கும் அதிருப்தியைத்தான் ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், பா.ஜ., கூட்டணியில் இருப்பதால், எஸ்.ஐ.ஆருக்கு ஆதரவு போல செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
- டி.ஆர்.பி.ராஜா, தமிழக அமைச்சர், தி.மு.க.,

