அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உறுதியான கூட்டணி: நயினார் நாகேந்திரன் பேட்டி
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உறுதியான கூட்டணி: நயினார் நாகேந்திரன் பேட்டி
ADDED : ஏப் 20, 2025 02:34 PM

திண்டுக்கல்: ''அ.தி.மு.க., -பா.ஜ., கூட்டணி உறுதியான கூட்டணி; இறுதியான கூட்டணி'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் கட்சி கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: அ.தி.மு.க., -பா.ஜ., கூட்டணி உறுதியான கூட்டணி; இறுதியான கூட்டணி. 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். அது இ.பி.எஸ்., தலைமையில் அமையும். அமித்ஷா வந்ததால் தான் குஜராத்தில் ஆட்சி வந்தது. மஹாராஷ்டிராவில் ஆட்சி மலர்ந்தது.
ஆட்சி மாற்றம் குறித்து நாம் பேச வேண்டியது இல்லை; அமித்ஷா, இ.பி.எஸ்., பார்த்து கொள்வார்கள். திருநெல்வேலி என்றால் அல்வா, மணப்பாறை என்றால் முறுக்கு.
திண்டுக்கல் என்றால் பூட்டு; இந்த ஆட்சிக்கு போட வேண்டும் பூட்டு. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே கவர்னர் ஒரு தபால்காரர் என முதல்வர் கூறுகிறார். கவர்னர் என்பவர் மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம்.
அப்படி இருக்கையில் கவர்னரை தபால்காரர் எனக் கூறுவது தமிழக முதல்வருக்கு அழகல்ல. சட்டசபை தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் அதற்கான பணிகளை செய்வதற்கான நேரம் குறைவாக உள்ளது. அதனால் நான் எந்த யாத்திரையும் மேற்கொள்ள திட்டம் தீட்டவில்லை. இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.

