தி.மு.க.,வை வீழ்த்தும் சக்தி அ.தி.மு.க.,வுக்கு இல்லை
தி.மு.க.,வை வீழ்த்தும் சக்தி அ.தி.மு.க.,வுக்கு இல்லை
ADDED : டிச 03, 2025 05:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எல்லாரையும் ஒங்கிணைக்க வேண்டும் என்று தெரிவித்த மூத்த நிர்வாகி செங்கோட்டையனை, 'கெட் அவுட்' என வெளியேற்றி உள்ளார் பழனிசாமி.
மாற்று அணிக்குச் சென்றாலும், நல்ல அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்தி இருப்பவர் செங்கோட்டையன். நட்பு ரீதியில் தான் அவரை சந்தித்துப் பேசினேன். அப்போது, த.வெ.க., கூட்டணிக்கு வரச்சொல்லி என்னை, அவர் அழைக்கவில்லை. சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணிக்கு எதிராக, த.வெ.க., தலைமையில் கூட்டணி அமைந்தால் கடும் போட்டி இருக்கும்.
ஜனவரியில், அ.ம.மு.க., யாருடன் கூட்டணி என்ற அறிவிப்பு வெளியிடப்படும். த.வெ.க., ஈர்ப்பில் நிறைய இளைஞர்கள் உள்ளனர். அதனால், அக்கட்சி தமிழக அரசியலில் பெரும் சக்தியாகி உள்ளது. தி.மு.க.,வை எதிர்த்து வீழ்த்தும் திறன் அ.தி.மு.க.,வுக்கு இல்லை. அதற்கு பழனிசாமியே காரணம்.
- தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,

