ADDED : ஏப் 24, 2025 09:08 PM

தி.மு.க., ஆட்சியில், பெண்கள் உயிரோடு வாழ்வதே சாதனைதான். இங்கு, பொம்மை முதல்வர் ஆட்சி செய்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளில், 20 ஆயிரம் 'போக்சோ' வழக்குகள் பதிவாகியுள்ளன.
சமூக ஆர்வலர்கள் மீதும், தி.மு.க., கட்சியின் அவலங்களை வெளிக்கொண்டுவரும் சவுக்கு சங்கர் போன்றோர் மீதும், நடவடிக்கை எடுக்கும் காவல் துறை, பொன்முடி மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?
மகளிருக்கு சிறு பிரச்னை என்றால் ரோட்டுக்கு வந்த, தி.மு.க., கூட்டணி கட்சியின் மகளிர் அமைப்புகள், கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதற்காக அமைதி காக்கின்றனர்;
சசிகலா, ஓ.பி.எஸ்., ஆகியோர் இல்லாமலேயே, அ.தி.மு.க., நிலைத்து விட்டது.
த.வெ.க., தலைவர் விஜயை, அரசியல் தலைவராக பார்க்கவில்லை. இங்கு சினிமா சூட்டிங் எடுக்கப்படவில்லை. நடப்பது எல்லாமே அரசியல்.
விந்தியா, மகளிரணி இணைச்செயலர், அ.தி.மு.க.,

