UPDATED : அக் 20, 2026 07:38 PM
ADDED : அக் 20, 2026 07:36 PM
சென்னை: அ.தி.மு.க.,வில், ‘ஊடகவியல்’ என்ற புதிய அணி உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு செயலராக, கோவை சத்யன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், ‘அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் பொறுப்பில் இருந்த கோவை சத்யன், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவர், அ.தி.மு.க., ஊடகவியல் பிரிவு செயலர் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்’ என, தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.,வில், தகவல் தொழில்நுட்ப பிரிவு எனப்படும் ஐ.டி., அணியின் தலைவராக இருந்த கோவை சத்யனுக்கும், அந்த அணியின் மாநில செயலர் ராஜ் சத்யனுக்கும், ஆரம்பத்தில் இருந்தே பிரச்னை நீடித்து வருகிறது. இந்நிலையில், கோவை சத்யனுக்காக, ஊடகவியல் என புதிய பிரிவை, கட்சியில் உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
