அதிமுக எம்எல்ஏக்கள் விவகாரத்தில் உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும்: சபாநாயகர் உறுதி
அதிமுக எம்எல்ஏக்கள் விவகாரத்தில் உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும்: சபாநாயகர் உறுதி
UPDATED : மே 16, 2026 10:04 PM
ADDED : மே 16, 2026 08:30 PM

சென்னை: ''அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் விவகாரத்தில், உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும்,'' என, தமிழக சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில், அவ்வை சண்முகம் சாலை, எஸ்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளில், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஆய்வு செய்தார். அப்போது, அவர் அளித்த பேட்டி: ஆயிரம் விளக்கு தொகுதியில், ஆயிரம் பணிகள் செய்ய வேண்டியுள்ளது. ஏராளமான பிரச்னைகள் உள்ளன.
இங்கு, ஒரு மாதத்திற்குள் தற்காலிக சாலை அமைக்கப்படும். விளையாட்டு மைதானங்களில், தேவையான வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள், உள்விளையாட்டு அரங்கம் போன்ற வசதிகள், ஏற்படுத்தி தரப்படும்.
பொது நலச்சங்கங்களை இணைந்து, மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தப்படும். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் விவகாரத்தில், இரு தரப்பினரும் மனு அளித்துள்ளனர். அதில், உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
