ADDED : நவ 27, 2026 05:21 PM
சென்னை: அரசாணைக்கு கூட, த.வெ.க., அரசு ‘ஸ்டிக்கர்’ ஒட்டுவதாக, அ.தி.மு.க., விமர்சித்துள்ளது.
‘தமிழக அரசு துறைகளில் பணியாற்றும் ஆண் ஊழியர்களுக்கு, மகப்பேறு கால விடுப்பு, 15 நாட்கள் வழங்கப்படும்’ என, முதல்வர் விஜய் நேற்று (நவ.,26) அறிவித்தார். இந்த அறிவிப்பு, பல ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பதாக, அரசு ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்நிலையில், அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசாணைக்கு, த.வெ.க., அரசு ‘ஸ்டிக்கர்’ ஒட்டி இருப்பதாக, அ.தி.மு.க., விமர்சித்துள்ளது.
அதன் அறிக்கை:
ஒரு ஆட்சியின் திட்டத்தை, அடுத்த ஆட்சி ‘ஸ்டிக்கர்’ ஓட்டியதை பார்த்திருக்கிறோம். ஆனால், கடந்த 2013-ல் அ.தி.மு.க., ஆட்சியில் வெளியான அரசாணைக்கு, 13 ஆண்டுகளுக்கு பின், ஸ்டிக்கர் ஒட்டும் அரசை இப்போது தான் பார்க்கிறோம். அடடே... ஆச்சரியக்குறி.
ஏற்கனவே, அ.தி.மு.க., ஆட்சியில் தொடங்கிய திட்டத்தை, தொடங்கி வைக்க ஒரு அரசா? ‘சூப்பர் ப்ரோ!’.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
