உள்ளடக்கத்திற்கு செல்ல
தனியார் கிடங்கில் அ.தி.மு.க., மப்ளர்கள் பறிமுதல்
தனியார் கிடங்கில் அ.தி.மு.க., மப்ளர்கள் பறிமுதல்
ADDED : ஏப் 12, 2026 07:13 PM
அ நிறம் | அளவு
தர்மபுரி: தனியார் லாரி பார்சல் சர்வீஸ் கிடங்கில், அ.தி.மு.க., கட்சி மப்ளர் துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தர்மபுரியில் தேர்தல் படையினர், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு தர்மபுரியில், பென்னாகரம் சாலையிலுள்ள, தனியார் லாரி பார்சல் சர்வீஸ் கிடங்கில் சோதனை நடத்தினர்.
அதில், அ.தி.மு.க., கட்சியின் கலரில், 8,400 எண்ணிக்கையில் இருந்த மப்ளர் துண்டுகளை, பறிமுதல் செய்தனர். இவை, பஞ்சாப் மாநிலம், லுாதியானாவில் இருந்து, தர்மபுரி டவுனிலுள்ள, கதர் கடை ஒன்றின் முகவரிக்கு அனுப்பப்பட்டிருந்தது. தர்மபுரி போலீசார் விசாரிக்கின்றனர்.
