தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/செயல்படாத மின் பொறியாளர் அறைக்கு பூட்டு போட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள்

செயல்படாத மின் பொறியாளர் அறைக்கு பூட்டு போட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள்

செயல்படாத மின் பொறியாளர் அறைக்கு பூட்டு போட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள்


UPDATED : அக் 18, 2026 12:11 AM

ADDED : அக் 18, 2026 12:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 12:11 AM ADDED : அக் 18, 2026 12:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவண்ணாமலை: பெரணமல்லுாரில், இரண்டு நாட்களாக மின் பழுதை சரிசெய்யாத மின் ஊழியர்களை கண்டித்து, அ.தி.மு.க.,வினர், மின்வாரிய பொறியாளர் அறைக்கு பூட்டு போட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லுார், அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலர் அறிவழகன். இவரது வீட்டில், இரண்டு நாட்களுக்கு முன், மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, பெரணமல்லுார் மின்வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.

ஆனால், பழுது பார்க்க யாரும் வரவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில், பெரணமல்லுார் நகர செயலர் மூர்த்தி தலைமையில், அறிவழகன் மற்றும் அ.தி.மு.க.,வினர், பெரணமல்லுார் மின்பகிர்மான நிலையம் சென்று அங்குள்ள ஊழியர்களிடம், மின் பழுதை சரிபார்க்காதது குறித்து கேட்டார்.

அதற்கு அவர்கள் சரிவர பதில் கூறவில்லை. இதனால், செயல்படாத மின் உதவி பொறியாளர் அறைக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் ஊழியர்கள், விரைவில் பழுது பார்ப்பதாக கூறி, சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us