ADDED : டிச 16, 2025 07:29 AM

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை:
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் நகரின் மையப் பகுதியில், தற்போதுள்ள பஸ் நிலையம், 1992ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் தி றக்கப்பட்டது.
தேவையில்லாமல் இந்த பஸ் நிலையத்தை, கும்பகோணம் நகரிலிருந்து, 10 கி.மீ., தொலைவில் உள்ள கருப்பூர் கிராமத்திற்கு மாற்றும் முயற்சியில், தி.மு.க., அரசு ஈடுபட்டுள்ளது.
கருப்பூர் பகுதியில் கும்பகோணம் தி.மு.க., - எம்.எல்.ஏ., சில அதிகாரிகள் மற்றும் அவர்களின் பினாமிகளுக்கு சொந்தமான நிலங்கள், அதிக அளவில் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த நிலங்களின் மதிப்பை உயர்த்தும் சுயநல நோக்குடன், புதிய பஸ் நிலையம் அமைக்க, விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருவதாக, கும்பகோணம் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அதோடு கும்பகோணம் மாநகராட்சியில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. இதற்கு காரணமான தி.மு.க., அரசையும், மாநகரா ட்சியையும் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், வரும் 20ம் தேதி, கும்பகோ ணத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

