UPDATED : நவ 29, 2026 06:11 PM
ADDED : நவ 29, 2026 06:08 PM
சென்னை: த.வெ.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், வரும் டிச.,2ல் நடக்க இருந்த ஆர்ப்பாட்டம், டிச.,3க்கு ஒத்தி வைக்கப்பட்டது.
விலைவாசி உயர்வு, சட்டம் – ஒழுங்கு பிரச்னை, மேகதாது அணை விவகாரம் ஆகியவற்றில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காத, த.வெ.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், வரும் டிச.,2ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கட்சியின், அமைப்பு ரீதியான 85 மாவட்டங்களில், ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்போர் பட்டியலை, கட்சியின் பொதுச் செயலர் பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில், த.வெ.க., அரசை கண்டித்து, டிச.2ம் தேதி நடக்க இருந்த ஆர்ப்பாட்டம், டிச.,3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக, அ.தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது. இதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. எனினும், டிச.,2ல், பார்லிமென்டில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதால், ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
