தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வரும் டிச., 2ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

வரும் டிச., 2ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

வரும் டிச., 2ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்


UPDATED : நவ 26, 2026 05:22 PM

ADDED : நவ 26, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 05:22 PM ADDED : நவ 26, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘த.வெ.க., அரசை கண்டித்து, தமிழகம் முழுதும் 85 இடங்களில், வரும் டிச., 2ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என, அ.தி.மு.க., அறிவித்துள்ளது.

அக்கட்சி வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் விஜய் தலைமையிலான த.வெ.க., ஆட்சிக்கு வந்த நாள் முதல், மாநில உரிமைகளை அடகு வைக்க தொடங்கி விட்டது. காவிரியில் நம் உரிமை குறித்தும், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டக் கூடாது என்ற நிலைப்பாடு குறித்தும், முதல்வர் வாய் திறக்கவே இல்லை.

அதேபோல், த.வெ.க., எம்.எல்.ஏ.,க்களும், அக்கட்சி நிர்வாகிகளும் தொடர்ந்து சட்டம் – ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்துகின்றனர்.

மாவட்ட கலெக்டருக்கே கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம், நீதிமன்றம் சென்ற பிறகே, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோரிக்கை மனு அளிக்க வந்தவரை, துணை சபாநாயகர் அடித்து துன்புறுத்தி உள்ளார்.

எனவே, த.வெ.க., ‘ரீல்ஸ் மாடல்’ ஆட்சியாளர்களின் முகத்திரையை கிழிக்கும் வகையிலும், அவர்களது மக்கள் விரோத, ஜனநாயக விரோத ஆட்சியை மக்கள் மன்றத்திலேயே அம்பலப்படுத்தும் வகையிலும், அ.தி.மு.க.,வின் 85 மாவட்டங்களில், வரும் டிச., 2ம் தேதி காலை 10:00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us