‘கும்பகர்ண துாக்கம் போட்டதால் அ.தி.மு.க.,வுக்கு மூன்றாமிடம்’
‘கும்பகர்ண துாக்கம் போட்டதால் அ.தி.மு.க.,வுக்கு மூன்றாமிடம்’
ADDED : நவ 13, 2026 06:18 PM
கோபி: ‘‘கும்பகர்ண துாக்கம் போட்டதால் தான், அ.தி.மு.க., மூன்றாமிடத்துக்கு சென்றது,’’ என்று, வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் பங்களாப்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், 1.23 கோடி ரூபாயில் கட்டிய கூடுதல் வகுப்பறை கட்டடத்தை இன்று (நவ.,13) திறந்து வைத்து, குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு, அதே பள்ளி மாணவ, மாணவியருக்கு கேக் வழங்கியவர், நிருபர்களிடம் கூறியதாவது:
கும்பகர்ணன் போல த.வெ.க., அரசு துாங்கவில்லை. கும்பகர்ண துாக்கம் போட்டதால் தான், அ.தி.மு.க., கடந்த சட்டசபை தேர்தலில் மூன்றாமிடத்துக்கு சென்றது. இனி எந்த தேர்தல் வந்தாலும், த.வெ.க., தான் வெற்றி வாகை சூடும். அ.தி.மு.க.,வில் இருந்து எம்.எல்.ஏ.,க்கள் வருவர் என நான் எந்த இடத்திலும் கூறவில்லை. த.வெ.க.,வில் இணைந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது, சி.பி.ஐ., இன்னும் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யவில்லை. அதன்பிறகே அதுகுறித்த கேள்வி கேட்க வேண்டும். தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை பற்றி ஏன் கேள்வி கேட்பதில்லை.
இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
