திருச்சி - ஹைதராபாத் விமான சேவைௐயை ஜூன் 1ல் துவக்குது 'ஏர் இந்தியா'
திருச்சி - ஹைதராபாத் விமான சேவைௐயை ஜூன் 1ல் துவக்குது 'ஏர் இந்தியா'
ADDED : ஏப் 17, 2025 12:53 AM
சென்னை:திருச்சி - ஹைதராபாத் விமான சேவையை, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமான நிறுவனம், வரும் ஜூன் 1ல் துவக்குகிறது.
திருச்சியில் இருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களுக்கு, 'இண்டிகோ' நிறுவனம் மட்டுமே விமானங்களை இயக்கி வருகிறது. மற்ற விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டாமல் இருந்ததால், விமான கட்டணம் பல மடங்காக இருந்து வருகிறது.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்துக்கு கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, திருச்சியில் இருந்து ஹைதராபாதுக்கு தினசரி விமானங்களை இயக்க, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனம் முடிவு செய்து உள்ளது. ஹைதராபாதில் இருந்து தினமும் காலை, 7:35 மணிக்கு புறப்படும் விமானம், காலை 9:15க்கு திருச்சி வந்தடையும்.
திருச்சியில் இருந்து காலை 9:45க்கு புறப்பட்டு, காலை 11:30 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும். விமான கட்டணம் 4,200 ரூபாயில் இருந்து துவங்குகிறது. கூடுதல் விபரங்களை, airindiaexpress.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இதேபோல, திருச்சி - பெங்களூரு இடையே, செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் விமானங்கள் இயக்க, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.