UPDATED : மே 10, 2024 06:05 PM
ADDED : மே 10, 2024 07:03 AM

சென்னை: அக் ஷய திருதியையான இன்று(மே 10) , சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, 2வது முறையாக உயர்ந்துள்ளது. முதலில், காலையில் சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.53,280க்கு விற்பனை ஆனது. காலை 8:30 மணிக்கு 2வது முறையாக சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து, ரூ. 53, 640க்கு விற்பனை ஆனது. மதியம் 3 மணிக்கு மேல் 3வது முறையாக தங்கத்தின் விலை 3வது முறையாக ரூ.520 உயர்வை சந்தித்து 54,160 ரூபாய் ஆக விற்பனை ஆகிறது.
கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டு வருகிறது. அதன் படி, ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயருமா? அல்லது இறங்குமா? என்ற ஏக்கத்தில் சாமானிய மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், அக் ஷய திருதியை துவங்கிய நிலையில், இரண்டு முறை தங்கத்தின் விலை உயர்வு கண்டுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.53,280 ஆக விற்பனை செய்யப்பட்டது. இப்போது 2வது முறையாக ஒரு சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, 53,640 ஆக விற்பனை ஆனது. இது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மதியம் 3 மணியளவில் 3வது முறையாக ரூ.520 உயர்வை சந்தித்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.54,160 ஆகவும், ஒரு கிராம் தங்கம் 6,770 ரூபாய் ஆகவும் விற்பனை ஆனது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை, ரூ.1.30 உயர்ந்து, ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.90,000க்கு விற்பனையாகிறது.