தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/உயிருடன் கரை ஒதுங்கிய சாளை மீன்கள்

உயிருடன் கரை ஒதுங்கிய சாளை மீன்கள்

உயிருடன் கரை ஒதுங்கிய சாளை மீன்கள்


UPDATED : நவ 11, 2026 11:00 PM

ADDED : நவ 11, 2026 10:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2026 11:00 PM ADDED : நவ 11, 2026 10:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துாத்துக்குடி:

பல லட்சம் சாளை மீன்கள் உயிருடன் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

துாத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான மணப்பாடு பகுதிக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தினமும் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மணப்பாட்டில் உள்ள புனித சவேரியார் சர்ச் பின்புறம் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் மாலை திடீரென சாளை மற்றும் பேச்சாளை என அழைக்கப்படும் இரண்டு வகையான மீன்கள் அதிகளவில் கரை ஒதுங்கின.

லட்சக்கணக்கில் கரை ஒதுங்கி கிடந்ததை கண்டதும் அப்பகுதி மீனவர்கள் ஆச்சரியமடைந்தபடி அவற்றை வீட்டிற்கு அள்ளி சென்றனர்.

மீனவர்கள் கூறியதாவது:

கடலில் மீன்கள் அதிகளவில் காணப்படும் போது சில நேரங்களில் இவ்வாறு கரை ஒதுங்குவது வழக்கம். பருவநிலை மாற்றித்தின் காரணமாகவும் இதுபோன்ற நடக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us