sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆப்ரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட 5 பேரும் தமிழர்கள்; உறவினர்கள் கண்ணீர்

/

ஆப்ரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட 5 பேரும் தமிழர்கள்; உறவினர்கள் கண்ணீர்

ஆப்ரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட 5 பேரும் தமிழர்கள்; உறவினர்கள் கண்ணீர்

ஆப்ரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட 5 பேரும் தமிழர்கள்; உறவினர்கள் கண்ணீர்

7


UPDATED : நவ 10, 2025 01:44 PM

ADDED : நவ 09, 2025 11:47 PM

Google News

7

UPDATED : நவ 10, 2025 01:44 PM ADDED : நவ 09, 2025 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி: மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட இந்தியர்கள் ஐந்து பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என, தெரியவந்துள்ளது. இதில், கடையநல்லுாரைச் சேர்ந்த இருவர், 8 மாதங்களுக்கு முன், அங்கு பணிக்கு சென்ற வர்கள் என தெரிய வந்துள்ளது.

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில், ராணுவ ஆட்சி நடக்கிறது. அங்கு ஆயுதம் ஏந்திய பயங்கரவாத அமைப்புகள், அடிக்கடி தாக்குதலில் ஈடுபடுவதும், வெளிநாட்டினரை கடத்துவதும் வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம், மேற்கு மாலியில் உள்ள கோப்ரி அருகே, தனியார் நிறுவனத்தில் நுழைந்த ஆயுதம் ஏந்திய கும்பல், அங்கு பணிபுரிந்த ஐந்து இந்தியர்களை துப்பாக்கி முனையில் கடத்தியது. கடத்தப்பட்டவர்கள், மாலியில் மின்மயமாக்கல் பணிக்காக சில மாதங்களுக்கு முன் அங்கு சென்றவர்கள்.

இந்த கடத்தல் சம்பவத்தை தொடர்ந்து, அந்நிறுவனத்தில் பணியாற்றிய மற்ற இந்தியர்கள், பாதுகாப்பாக அந்நாட்டின் தலைநகர் பமாகோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த கடத்தல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கடத்தப்பட்ட ஐந்து பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என, தற்போது தெரியவந்துள்ளது.

அவர்கள், துாத்துக்குடி மாவட்டம், ஓட்டபிடாரம் அடுத்த கொடியங்குளம் புதியவன், 52, நாரைகிணறு பொன்னுதுரை, 41, வேப்பங்குளம் பேச்சிமுத்து, 42, தென்காசி மாவட்டம், கடைய நல்லுார் அடுத்த முத்து கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த இசக்கிராஜா , 36, புதுக்குடி தளபதி சுரேஷ், 26, என, தெரியவந்துள்ளது.

இவர்களை புளியங் குடியை சேர்ந்த மாரியப்பன் என்ற அவர்களின் உறவினர், அங்கு பணிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதில், ஐந்து பேரும் மும்பையை சேர்ந்த, 'ட்ராயிங் ரெயில் லைட்டிங்' என்ற நிறுவனத்தின் கீழ் மின்மயமாக்கல் திட்ட பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றி உள்ளனர். இவர்களுடன், 100 இந்தியர்கள் இருந்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு திரும்பிவிட்ட நிலையில், தற்போது 18 பேர் மட்டுமே அங்கு பணியில் இருந்துள்ளனர். இவர்களில் தற்போது ஐந்து பேரை ஆயுத கும்பல் கடத்தியுள்ளது.

இவர்களை உடனடி யாக மீட்க கோரி, கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் மனு அளிக்க உள்ளனர்.

தூதரம் நம்பிக்கை
கடத்தப்பட்ட 5 இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாலியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், 'கடந்த நவ.,6ம் தேதி மாலியில் 5 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும், மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, மாலி அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் இந்திய தூதரகம் தொடர்ந்து பேசி வருகிறது,' இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us