கூட்டணி பேச்சு: பிப்.,13ல் தமிழகம் வருகிறார் மல்லிகார்ஜூன கார்கே
கூட்டணி பேச்சு: பிப்.,13ல் தமிழகம் வருகிறார் மல்லிகார்ஜூன கார்கே
ADDED : ஜன 25, 2024 03:41 PM

சென்னை: லோக்சபா தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த பிப்ரவரி 13ம் தேதி காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தமிழகம் வருகிறார்.
இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இப்போதே கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை துவக்கி உள்ளன. அந்த வகையில் கூட்டணி பேச்சு நடத்துவதற்கான குழுவையும், தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவையும் திமுக சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, டி.ஆர்.பாலு தலைமையிலான கூட்டணி பேச்சு நடத்தும் குழு, முதல்கட்டமாக காங்கிரசுடன் வரும் 28ம் தேதி பேச்சுவார்த்தையை துவக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் லோக்சபா தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த பிப்ரவரி 13ம் தேதி காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தமிழகம் வருகிறார். அப்போது கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து தமிழக காங்., தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.