ADDED : டிச 24, 2025 06:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை, சீர்திருத்தம் என்ற பெயரில், புதிய சட்டமாக்கியுள்ளது மத்திய அரசு. இது, மகாத்மா காந்தியின் தத்துவத்தை சிதைத்து, ஏழை இந்தியர்களிடமிருந்து வேலை செய்யும் உரிமையை பறிக்கும் திட்டமிட்ட செயல்.
கடந்த 11 ஆண்டுகளில், வரவு, செலவு திட்டத்தை குறைப்பதில் துவங்கி, மாநிலங்களுக்கு சேர வேண்டிய நிதியை நிறுத்தி வைப்பது வரை, மத்திய அரசு திட்டமிட்டு இத்திட்டத்தை வலுவிழக்க செய்துள்ளது. 100 சதவீதம் மத்திய அரசால் நிதியளிக்கப்பட்டு வந்த இத்திட்டத்தை, இப்போது 40 சதவீதம் செலவை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. இது ஒரு நிதி துரோகம். நாங்கள் இந்த மக்கள் விரோத, தொழிலாளர் விரோத தாக்குதலை எதிர்த்து, வீதி முதல் பார்லிமென்ட் வரை போராடுவோம்.த.வெ.க.,வுடன் கூட்டணி குறித்து சிந்திக்கவில்லை.
- மது கவுடு யாஷ்கி, தேசிய செய்தி தொடர்பாளர், காங்கிரஸ்

