ADDED : பிப் 14, 2024 04:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில், ம.நீ.ம., கட்சிக்கு, டார்ச்லைட் சின்னத்தை, இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி, 2019 லோக்சபா தேர்தல்; 2021 சட்டசபை தேர்தலில், டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டது.
வரும் லோக்சபா தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ம.நீ.ம., கட்சிக்கு, தேர்தல் ஆணையம், டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி, நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

