sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 25, 2026 ,பங்குனி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓடிக் கொண்டிருந்த அரசு பஸ்ஸின் சக்கரங்கள் கழண்டதால் பரபரப்பு

/

ஓடிக் கொண்டிருந்த அரசு பஸ்ஸின் சக்கரங்கள் கழண்டதால் பரபரப்பு

ஓடிக் கொண்டிருந்த அரசு பஸ்ஸின் சக்கரங்கள் கழண்டதால் பரபரப்பு

ஓடிக் கொண்டிருந்த அரசு பஸ்ஸின் சக்கரங்கள் கழண்டதால் பரபரப்பு

3


ADDED : பிப் 21, 2026 02:51 PM

Google News

3

ADDED : பிப் 21, 2026 02:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை: மயிலாடுதுறை சீர்காழி அருகே அரசு பஸ்ஸின் பின்புற சக்கரங்கள் திடீரென கழன்றது. டிரைவர் பஸ்ஸை சாதுர்யமாக நிறுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்த அரசு பஸ், பகல் 12:30 மணிக்கு சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்றது. டிரைவர் செல்லப்பாண்டி ஓட்டி சென்றுள்ளார். இந்த பஸ்ஸில் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை செல்லும் பயணிகள் பயணித்துள்ளனர்.

சீர்காழி அருகே சேந்தங்குடி ரயில்வே மேம்பாலம் இறங்கியதும், பஸ் ஸ்டாப் அருகே பஸ்ஸின் பேரிங் உடைந்து வலது பின்புறம் உள்ள 2 சக்கரங்கள் வெளிவந்தன. இதனால் பலத்த சத்தம் எழுந்தது. அதனைக் கேட்ட பயணிகள் அச்சத்துடன் அலறி கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து டிரைவர் பஸ்ஸை லாபகமாக நிறுத்தினார். அதனால் விபத்து ஏற்படாமல் பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

மேம்பாலத்தில் இருந்து இறங்கும் போது சக்கரங்கள் கழன்று இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும். இதையடுத்து, பஸ்ஸில் இருந்த பயணிகள் இறக்கிவிடப்பட்டு மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

பல உயிர்கள் பயணிக்கும் அரசு பஸ்கள் அவ்வப்போது சோதனை செய்யப்படாததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. எனவே, தமிழக அரசு விபத்துகளை தடுக்க அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் கூடுதல் மெக்கானிக்கை பணியமர்த்தி சோதனைக்கு பின்பு, பஸ்களை மக்கள் பயன்பாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us