நாளை காரைக்குடியில் அமித்ஷாவின் 'ரோடு ஷோ': திடீர் ரத்து
நாளை காரைக்குடியில் அமித்ஷாவின் 'ரோடு ஷோ': திடீர் ரத்து
ADDED : ஏப் 11, 2024 11:27 AM

சிவகங்கை: நாளை (ஏப்.,12) காரைக்குடியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்த நிலையில், தற்போது திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மதுரை வரும் அமித்ஷா, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் பங்கேற்பதாகவும், பின்னர் மாலை 6:10 மணியளவில் மதுரையிலும் 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் பங்கேற்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை காரைக்குடியில் நடைபெறும் 'ரோடு ஷோ' ரத்து செய்யப்படுவதாக திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது.
ரத்துக்கான காரணங்கள் தெரியவில்லை. காரைக்குடி ரோடு ஷோ ரத்து போல அமித்ஷாவின் மதுரை ரோடு ஷோ திட்டமிட்டபடி நடக்குமா அல்லது ரத்தாகுமா என்பதும் தெரியவில்லை. ஏற்கனவே கடந்த ஒரு வாரத்தில் இரண்டு முறை அமித்ஷா தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது 3வது முறையாக ரத்து செய்யப்படுகிறது.

