ADDED : டிச 15, 2025 06:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பீஹாரில் வெற்றி பெற்றது போல், தமிழகத்திலும், 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவோம் என, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முழங்குகிறார். மேற்கு வங்கத்திலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என அமித் ஷா சொல்கிறார். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் எளிதாக கடந்து போக முடியாது.
ஏனென்றால், பீஹார் சட்டசபை தேர்தலில் மட்டுமல்ல; கேரளாவிலும் திருவனந்தபுரம் மாநகராட்சியை, பா.ஜ.,வினர் கைப்பற்றியுள்ளனர். கேரளாவில் இப்படி ஒரு பின்னடைவு இடதுசாரிகள் மற்றும் காங்., கட்சிக்கு ஏற்பட்டதை எதிர்பார்க்கவில்லை. பா.ஜ.,வினர் பீஹாரில் கையாண்ட ஓட்டுத்திருட்டு உத்தியை , தமிழகத்திலும் கையாள முயற்சிக்கின்றனர் என்பதை உணர முடிகிறது. அதை நடக்க விடாமல், விழிப்புடன் தடுக்க வேண்டும்.
- திருமாவளவன்
தலைவர், விடுதலை சிறுத்தைகள்

