உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஆக 09, 2026 11:02 PM
அ நிறம் | அளவு
சென்னை: புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அமித் ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னை வந்து, மாலை 3:00 மணிக்கு டில்லி செல்வதாக இருந்தது.
ஆனால், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, அவரது ஹெலிகாப்டர் சென்னை விமான நிலையத்திற்கு வர முடியாமல், தாம்பரம் விமானப்படை பயிற்சி தளத்தில் தரையிறங்கியது.
அங்கிருந்து அமித் ஷா காரில் புறப்பட்டு, மாலை 4:45 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையம் வந்தார்; மாலை 4:54 மணிக்கு, விமானத்தில் டில்லி சென்றார்.
வானிலை காரணமாக, அமித் ஷாவின் டில்லி பயணம் இரண்டு மணி நேரம் தாமதமானது.
